உன்னைப்போல் ஒருவன்

இன்று தமிழ்நாட்டில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை பற்றி பேசாத மக்களே இல்லை. நான் அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதை பேச விரும்பவில்லை. தீவரவாதியாக உருவபடுதப்பட்ட ஈழ தலைவரை கொன்று விட்டோம் என்று கொக்கரிக்கும் கூடத்துக்கு ஓரு விஷயம் தெளிவு படுத்த விரும்புகிறேன்.

தமிழ் ஈழம், தமிழ் மக்களுக்கு சமஉரிமை என்பது எதோ பிரபாகரனின் சொந்த பிரச்னையும் இல்லை, அவர் மட்டுமே ஸ்ரீ லங்கா அரசுக்கு சம உரிமை கோரும் தனி மனிதனும் இல்லை. அது ஒரு தலைமுறையாக போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஈழ தமிழரின் இரத்தத்தில் ஊறிப்போன வேட்கை. அதை அழிக்க எவன் எந்த ஆயுதம் கொண்டு வந்தாலும் ஒரு துளியும் அகற்ற முடியாது என்பது தான் என் தாழ்மையான கருத்து.

ஈழத்தில் ஒரு பிரபாகரனின் தான் இருக்கிறான் என்று நீங்கள் நினைத்தால் அது உங்களின் அறிவிமையை தான் காட்டும் . அங்கு சம உரிமை கோரி போராடும் ஒவ்வொரு எம் இன மக்களும் ஒரு பிரபாகரன் தான். அந்த உணர்வு ஒவ்வொரு ஈழ தமிழனின் குருதியிலும் உள்ளது. இன்று எம் இன மக்களை கொன்று குவிக்கும் இன வெறி அரசும் அதன் கூட்டாளிகளும் இன்று வெற்றி பெற்றது போல் தோன்றினாலும் இறுதியில் விடுதலை போராட்டம் தான் வெற்றி பெரும் ...